Tamilnadu
தூய்மைப் பணியாளரை சாதிய வன்மத்தோடு இழிவுபடுத்திய நபர் மீது போலிஸ் வழக்குப்பதிவு : 3 மாதம் சிறை தண்டனையா?
சென்னை பள்ளிகரணை பகுதியில் உள்ள ஐஐடி காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் நேற்றைய தினம் தனியார் நிறுவனத்தில் கழிவுநீர் எடுக்கும் லாரி ஓட்டுநரான தூய்மைப் பணியாளர் மணிகண்டனை என்பவரை தகாத வார்த்தையால் கொச்சையாக பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் சந்திரசேகர் பேசுவதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். சாதிய வன்மத்தோடு சந்திரசேகர் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சந்திரசேகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். இதனிடையே மிகுந்த மனவேதனை அடைந்த மணிகண்டன் இதுதொடர்பான புகாரை பள்ளிகரணை காவல் நிலையத்தில் அளித்திருந்தார்.
அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில், தகாத வார்த்தையால் கொச்சைபடுத்தும் வகையில் திட்டியது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 294B பிரிவின் கீழ் போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Also Read
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !