Tamilnadu
#COVID19 “உலகின் சவாலான தொற்றுநோய்களைக் கண்ட தமிழகத்தின் 100 வயது விவசாயி” : ஆரோக்கியத்தைப் பேண அட்வைஸ்!
உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்திருந்தாலும், அதனால் பாதிக்கப்பட்ட 11 லட்சத்துக்கும் மேலானோர்களில் சுமார் 2 லட்சம் பேர் குணமடைந்திருப்பது மக்களுக்கு ஒரு வித மன நிம்மதியையும், நம்பிக்கையையும் கொடுத்து வருகிறது.
அதேசமயத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் உருவான இப்போதைய கொரோனா உட்பட பல கொடிய நோய்களுக்கு ஆட்பட்டு உயிர்பிழைத்தவர்களும் உள்ளனர். குறிப்பாக 1918-20ம் ஆண்டு காலத்தில் உருவான ஸ்பானிஷ் ஃப்ளு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தற்போதைய கொரோனாவாலும் பாதிக்கப்பட்டு குணமடைந்திருக்கிறார்கள் என்றதகவலை இணையத்தில் அவ்வப்போது காண முடிகிறது.
அந்த வகையில், நம் நாட்டில் அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரும் ஸ்பானிஷ் ஃப்ளு, காலரா போன்ற கொடிய நோய்கள் ஏற்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார். இதுதொடர்பாக இந்து தமிழ் திசை நாளிதழிக்கு திருப்பூரைச் சேர்ந்த 100 வயதைக் கடந்த சுப்பையன் என்பவர் தன்னுடைய நினைவை பகிர்ந்திருக்கிறார்.
தலைமுறை தலைமுறையாக சுப்பையனின் குடும்பத்தார் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் காலத்திலேயே 6ம் வகுப்பு வரை படித்திருந்த சுப்பையனும் விவசாயத்தையே பின்பற்றி இதுவரை அந்தத் தொழிலையே செய்து வருகின்றார். அண்மையில் கீழே விழுந்ததால் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உலகம் முழுவதும் ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. அதில் தன்னுடைய குடும்பத்தாரும் உயிரிழந்ததாக கூறியுள்ள சுப்பையன், அதன் பிறகு 1956ம் ஆண்டு ஏற்பட்ட காலராவின் போது தனது சகோதரியும் உயிரிழந்ததாக கூறினார்.
மேலும், “அப்போது ஊரையே காலி செய்துவிட்டு, எல்லையில்தான் தங்கியிருந்தோம். அந்த சமயத்தில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தோம். இதோ இப்போது கொரோனா வைரஸும் பரவி வருகிறது. இதனையும் வாழ்வில் கடந்து சென்றுதான் ஆகவேண்டும். உடலையும், மனதையும் எப்போதும் ஆரோக்கியமானதாக வைத்திருந்தால் எந்த நோயையும் எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!