Tamilnadu
“பிரிட்டனே அர்த்த சாஸ்திரத்தை வைத்துத்தான் ஆட்சி செய்கிறது”- ‘சாணக்யா’ விழாவில் ‘மனு’ பெருமை பேசிய ரஜினி!
ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் ‘சாணக்யா’ செய்தி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு விழாவையொட்டி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு, மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் ஆகிய மூவருக்கும் ‘சாணக்யா விருதுகள்’ அறிவிக்கப்பட்டிருந்தது.
தோழர் நல்லகண்ணு, வலதுசாரி ஆதரவாளரும் பா.ஜ.க அபிமானியுமான ரங்கராஜ் பாண்டேவின் நிறுவனம் வழங்கும் சாணக்கியரின் பெயரிலான விருதை ஏற்க மறுத்தார்.
இந்நிலையில், அந்த விருது வழங்கும் ‘சாணக்யா’ நிறுவனத்தின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், விருது பெறுவோரையும், ரங்கராஜ் பாண்டேவையும் பலவாறாகப் புகழ்ந்து பேசினார்.
மேலும், அர்த்த சாஸ்திரம், கோஹினூர் வைரம் உள்ளிட்ட பெருமதிப்பு கொண்ட பொருட்களை பிரிட்டிசார் கொள்ளையடித்துச் சென்றதாகவும், அர்த்த சாஸ்திரத்தைக் கொண்டே இவ்வளவு ஆண்டுகாலமாக இங்கிலாந்தில் ஆட்சி நடத்துவதாகவும் பேசினார்.
“அர்த்த சாஸ்திரத்தைப் படித்துத்தான் இங்கிலாந்து ராணி ஆட்சி செய்கிறாரா?” என சமூக வலைதளங்களில் பலரும் ரஜினியின் பேச்சை கிண்டல் செய்து வருகின்றனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!