Tamilnadu
பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு - BJP, VHP அமைப்பினர் கைது : சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!
கோவை மாவட்டம் கணபதி வேதம்பாள் நகரில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இந்த பள்ளிவாசல் மீது கடந்த 4-ம் தேதி இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சரவணம்பட்டு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்து முன்னனி அமைப்பினர் மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றதை வைத்து இரண்டிற்கும் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் போலிஸார் விசாரித்தனர்.
அந்த விசாரணையின் அடிப்படையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த அகில் மற்றும் பா.ஜ.க உறுப்பினரான பாண்டி ஆகிய இருவரையும் சந்தேகத்தின் போரில் போலிஸார் கைது செய்தனர். பள்ளிவாசல் மீது இவர்கள் இருவரும் பெட்ரோல் குண்டு வீசியது போலிஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!