Tamilnadu
குடியாத்தம் தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்!
குடியாத்தம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் காத்தவராயன் (59). திருமணம் செய்துகொள்ளாத இவர், தனது சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
காத்தவராயன் எம்.எல்.ஏ, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். 2011ல் நகர்மன்றத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து இதய அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று திருவொற்றியூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்த நிலையில், இன்று குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் உயிரிழந்துள்ளது தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !