Tamilnadu
சத்தமில்லாமல் தாக்கி வரும் ‘பன்றிக்காய்ச்சல்’ : ஒரே மாதத்தில் 132 பேர் பாதிப்பு : தமிழகம் முதலிடம்!
பன்றிக்காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 132 பேர் பாதிப்பிற்குள்ளானதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
H1N1 மற்றும் H2N3 போன்ற பல்வேறு வகையான வைரஸ்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. நாடு முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் 132 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. இருமல், சளியுடன் வரும் நோயாளிகளுக்கு தனியாக சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பன்றிக் காய்ச்சல் பாதிப்பைப் பொறுத்தவரை நடப்பாண்டில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது அடுத்தபடியாக தெலங்கானாவில் 78 பேரும், கர்நாடகாவில் 74 பேரும் டெல்லியில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சுமார் 437 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பது இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!