Tamilnadu

வரவேண்டிய 4,073 கோடி GST நிலுவை - மோடி தருவார் என்று ’நம்புகிறோம்’ : அடிமை அரசின் அலட்சியம் !

மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு சரக்கு மற்றும் சேவை வரி (GST) முறையை கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் முதல் அமலுக்குக்கு கொண்டுவந்தது.

வரி விதிப்பு முறையில் பா.ஜ.க அரசு கொண்டுவந்த மாற்றத்தால், நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என பெருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தநிலையில், ஜி.எஸ்.டி திட்டம் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அமல்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு நாட்டு மக்கள் மட்டுமின்றி, மாநிலங்களின் நிர்வாகமும் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசு, ஜி.எஸ்.டி வரியினால் மாநிலங்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும் என கூறியது.

அதுமட்டுமின்றி, கடந்த 2015-16 ஆண்டு நிதியாண்டின் வரி வருவாயில் 14 சதவீதம் என்ற அடிப்படையில், மாநிலங்களின் வருவாய் பாதுகாக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த இழப்பீடு தற்காலிகமாக கணக்கிடப்பட்டு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதனையடுத்து, நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கக்கோரி, டெல்லி, பஞ்சாப், புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் நிதியமைச்சரகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

அப்போது மோடி அரசின் மீது இருந்த விசுவாசத்திற்காக நிலுவைத் தொகை வராதபோதும், அதுகுறித்து கவலைப்படாத தமிழக அரசு இது தொடர்பாக பெரிய அளவிலான முயற்சிகள் எடுக்காமல் இருந்தது.

இதன் காரணமாக 2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 4,073 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை வரவேண்டியுள்ளது. தற்போது வரை அந்த தொகையை முழுமையாக அ.தி.மு.க அரசு பெறவில்லை.

இந்நிலையில், இன்று நடைபெற்ற தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 4,073 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை உள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம்” என மேம்போக்காகக் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டின் பங்காக பெறப்படும் மத்திய வரிகளில் நிதி பகிர்வு 2019- 2020 ஆம் ஆண்டிற்கான எடுத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டதினால் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

Also Read: #LIVEUpdates | தமிழக பட்ஜெட் 2020-2021 : ரூ.4 லட்சம் கோடி கடன்சுமையில் இருந்து மீளுமா தமிழகம் ?

பா.ஜ.க அரசுக்கு அடிமை சாமரம் வீசும் அ.தி.மு.க அரசு, கை கட்டி வாய் மூடி வேடிக்கை பார்ப்பதிலேயே கண்ணாக உள்ளது. இதன் மூலம் தமிழகம் கடன் சுமையில் தத்தளித்தாலும் கவலைப்படாத அதிமுக அரசு ஜி.எஸ்.டி வரி வசூலை கேட்காமல் தருபோது வாங்கிக்கொள்ளும் மனநிலையில் இருப்பதாக அரசியல் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: “ரூ.4,56,660 கோடியாக அதிகரிக்கும் கடன்” : தமிழகத்தை கடனில் தத்தளிக்கச் செய்த 9 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சி!