Tamilnadu
"மாவட்டம்தோறும் ஏஜென்ட்” : M.L.M போல செயல்பட்ட TNPSC முறைகேடு கும்பல் - மேலும் இருவர் கைது!
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் என செயல்பட்டதாக இடைத்தரகர் ஜெயக்குமார் சி.பி.சி.ஐ.டி போலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு சி.பி.சி.ஐ.டி போலிஸாரால் கைது செய்யப்பட்ட ஓம்காந்தனை கடந்த 6ஆம் தேதி போலிஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் முக்கிய இடைத்தரகரான ஜெயகுமாரை ஏழு நாள் போலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இன்று ஐந்தாவது நாளாக சி.பி.சி.ஐ.டி போலிஸார் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலிஸார் நடத்திய விசாரணையில் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஓம்காந்தனுக்கு குரூப்-4, குரூப்-2A, VAO ஆகிய மூன்று தேர்வு முறைகேடுகளிலும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், ஓம்காந்தன் மற்றும் ஜெயகுமார் ஆகிய இருவரும் போலிஸ் காவலில் ஒன்றாக இருக்கும்போதே அவர்களை ராமேஸ்வரம் கீழக்கரை மையங்களுக்கு அழைத்துச் சென்று முறைகேடு நடத்தியது எப்படி என்பது குறித்து நடித்துக்காட்டி அதைப் பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் ஆவணங்களைச் சேகரித்துள்ளனர்.
குரூப்-4 முறைகேடுகள் முறையே ராமேஸ்வரம், கீழக்கரை மற்றும் இளையான்குடி மையங்களில் நடந்துள்ளதாக போலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் குரூப்-2A மற்றும் VAO தேர்வு முறைகேடு எந்த மையத்தில் நடந்தது என்பது குறித்து இடைத்தரகர் ஜெயகுமாரிடம் சி.பி.சி.ஐ.டி போலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுவரை ஜெயக்குமாரிடம் நடத்திய விசாரணையில், 2016ஆம் ஆண்டு முதல் தான் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்டு என மல்டிலெவல் மார்க்கெட்டிங் போலவும், ஜெயக்குமார் தலைமை ஏஜென்டாக ஒரு நிறுவனம் போல இந்த முறைகேட்டை நடத்தியதாகவும் விசாரணையில் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயகுமார் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏஜென்டுகளின் பெயரை சேகரித்துள்ள போலிஸார் அவர்களுக்கும் இதுவரை நடந்துள்ள முறைகேடுகளுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என சி.பி.சி.ஐ.டி போலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், டி.என்.பி.எஸ்.சி அலுவலக ஊழியரான ஓம்காந்தனுக்கு குரூப்-4, குரூப்-2A மற்றும் VAO ஆகிய மூன்று தேர்வு முறைகேடுகளிலும் தொடர்பு இருப்பதையும் ஜெயக்குமார் போலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுவரை டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் குரூப்-4 குரூப் 2 ஏ, மற்றும் VAO தேர்வு முறைகேடு வழக்கில் தற்போது வரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற VAO தேர்வில் முறைகேடாகப் பணியில் சேர்ந்த மேலும் இருவரை சி.பி.சி.ஐ.டி போலிஸார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!