Tamilnadu
பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : பா.ம.க நிர்வாகி போக்சோவில் கைது!
பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை 102வது வட்ட செயலாளர் சத்யா. ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள பள்ளி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் நட்பாகப் பழக்கி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 27-ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே பள்ளிக்குச் சென்ற மாணவி இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை என மாணவியின் பெற்றோர் 28-ம் தேதி காலையில் டிபி சத்திரம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் என புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அன்று மாலையே கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காணாமல் போன பள்ளி மாணவி, சத்தியா என்ற நபர், ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தாக புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், டிபி சத்திரம் 102வது பகுதி பா.ம.க வட்ட செயலாளர் சத்தியாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட பா.ம.க நிர்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.
Also Read
-
நாக்கில் நாராசம்.. கெட்டவர்.. இழிபிறவிகள் - சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!