Tamilnadu

#CAA நாட்டு மக்களை மத ரீதியாக பா.ஜ.க பிளவுபடுத்த நினைத்தால், போராட்டத் தீ பரவும் : கி.வீரமணி

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்களும், மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண விழாவின் போது செய்தியாளர்களை சந்தித்த குடியுரிமை சட்டம் தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசியுள்ளார்.

அதில், “கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய பா.ஜ.க அரசு இயற்றியுள்ள இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புக்கே முரணானது.

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரை நீக்கிவிட்டு அகதிகளாக உள்ளவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடியுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும். குடியுரிமை சட்டத்தில் அவசர கதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.

நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்துவதற்காகவே இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளதால் நாடுமுழுவதும் போராட்டங்கள் தீயாய் பரவி வருகின்றன.”