Tamilnadu
“பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொறுப்பு சமூகத்திற்கு உள்ளது” - கனிமொழி எம்.பி கருத்து!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இதில் தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழியும், காங்கிரஸைச் சேர்ந்த குஷ்புவும் பங்கேற்றனர். அப்போது கனிமொழி பேசியதாவது, “பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
சென்னை மற்ற நகரங்களை விட பாதுகாப்பானது என்பார்கள். ஆனால் எத்தனை பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பீர்கள் என கேள்வி எழுப்பினால் கண்டிப்பாக சொல்லமாட்டார்கள்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொறுப்பு சமூகத்திற்கும் உள்ளது. பாலியல் தொடர்பான கல்வி மிகவும் அவசியம். அவற்றை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆனால், நிர்பயா நிதியை செலவழிப்பது எப்படி என தெரியவில்லை என்று கூறும் நிலையில் தான் தமிழகத்தில் அரசே உள்ளது. திருமண உறவுக்குள் பாலியல் வன்கொடுமை இல்லையென சொல்லிவிட முடியாது. ஆனால் அவை நம் நாட்டில் குற்றமாக கருதப்படுவதில்லை.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளேன். விரைவில் இந்த தனிநபர் மசோதா மீது விவாதம் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கிறேன்.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் வரும் காட்சிகளும் காரணமாக உள்ளது. பெண்கள் மீது வன்முறையை ஏவுவது தவறு என அனைத்து ஊடகங்களும் புரிந்து செயல்படவேண்டும்” என கனிமொழி தெரிவித்துள்ளார்.
Also Read
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!