Tamilnadu

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்தக் கோரி தி.மு.க வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

எஸ்.சி எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடை முறையாக பின்பற்றாமல் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ஆகையால் அதனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்திய பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது

ஆனால் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் அவசர கதியில் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம். இதனையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தேர்தல் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க சார்பில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது

மேலும், காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க ஆகிய கட்சிகளின் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது