Tamilnadu
“நடுக்குப்பம் ஊராட்சி தலைவர் பதவி ஏலம்” : மாநில தேர்தல் ஆணையம், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்!
கடலூர் மாவட்டம் நடுக்குப்பம் ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் விடப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில தேர்தல் ஆணையம், லஞ்ச ஒழிப்பு துறைக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் புகார் அனுப்பியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதற்காக திட்டமிட்டு அ.தி.மு.க ஆரசு குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், அ.தி.மு.க பிரமுகர்கள் ஜனநாயக விரோதமாக ஏல முறையில் பதவிகளைப் பெற முயற்சித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள நடுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை அ.தி.மு.க பிரமுகர் சக்திவேல், துணை தலைவர் பதவியை தே.மு.தி.க பிரமுகர் முருகன் ஆகியோர் முறையே ரூபாய் 50 லட்சம், 15 லட்சம் ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடுக்குப்பம் ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் விடப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாநில தேர்தல் ஆணையம், லஞ்ச ஒழிப்பு துறைக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் புகார் அனுப்பியுள்ளது.
சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் அனுப்பியுள்ள புகார் மனுவில், “நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.50 லட்சத்திற்கும், துணைத்தலைவர் பதவி ரூ.15 லட்சத்திற்கும் ஏலம்விடப்பட்டதாக தொலைக்காட்சிகளில் இன்று செய்தி ஒளிப்பரப்பானது.
ஏலம் விடப்படுவது குறித்தான வீடியோ காட்சிகளும் காட்டப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நேரத்தில் இது “ஓட்டுக்கு மறைமுகமாக பணம் தரும்” தேர்தல் குற்றமாகும்.
எனவே, இதுகுறித்து உடனடியாக விசாரித்து, சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கீழ்கண்ட விஷயங்களை உள்ளடக்கி அறிவிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டுகிறோம்.
1. இதுபோன்று பதவிகளை ஏலம் விடுவது சட்டத்திற்குப் புறம்பானது.
2. இதற்கும் ஓட்டுக்குப் பணம் வாங்குவதற்கும் வித்தியாசமில்லை.
3. இதுபோன்று ஏலம் விடப்படும் சம்பவத்தில் ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தில் பங்கேற்றவர்கள் போன்ற அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.
4. தற்போது ஏலம் விடப்பட்ட நடுக்குப்பம் ஊராட்சியில் தேர்தலை ரத்து செய்துவிட்டு நியாயமான முறையில் தேர்தல் நடத்த வழிவகை செய்யவேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!