Tamilnadu
குடும்பத் தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிக் கொன்ற மனைவி!
சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் உபயதுல்லா (39). இவருக்கு மனைவி நஸ்ரின் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 2 ம் தேதி அன்று கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நஸ்ரின் அடுப்பில் இருந்த சூடான எண்ணெய்யை கணவர் மீது ஊற்றியுள்ளார்.
வலி தாங்க முடியாமல் அலறிய உபயதுல்லாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் நஸ்ரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த உபயதுல்லா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதனையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் அவரது மனைவி நஸ்ரினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?