Tamilnadu
‘பஜ்ஜி சரியில்லை எனக்கூறியவருக்கு சராமரி கத்தி குத்து’- உணர்ச்சிவசப்பட்ட கடைக்காரருக்கு ஜெயில்!
சென்னை வியாசர்பாடி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானமணி. இவர் சென்னை சவுகார்பேட்டை பார்க் டவுன் கிருஷ்ண ஐயர் தெருவில் உள்ள சஞ்சய் எலக்ட்ரிக்கல் கடையில் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் ஞானமணி தனது பணியை முடித்துக்கொண்டு அவரது நண்பன் சீனிவாசனுடன் சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கர் தெருவில் உள்ள பஜ்ஜி கடைக்கு சென்றுள்ளார்.
அங்கு வாங்கி சாப்பிட்ட பஜ்ஜி, சரியில்லை என்று கடைக்காரரிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த கடையில் வேலை செய்யும் வடமாநிலத்தை சேர்ந்த அருண் என்பவர் ஞானமணியை தகாத முறையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஞானமணி, அருணின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அருண் தன் கையில் வைத்திருந்த வெங்காயம் வெட்டும் கத்தியால் ஞான மணியின் தலையில் வெட்டியுள்ளார். இதில் தலையில் காயம் ஏற்பட்ட ஞானமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூக்கடை போலிஸார் அருணை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகள் கொண்டு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஜ்ஜி சரியில்லை என கூறிய நபரை கடைக்காரர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!