Tamilnadu
TNPSC குரூப் 4 தேர்வு எழுதியோருக்கு கூடுதல் வாய்ப்பு... காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ‘குரூப்-4’ தேர்வு கடந்த செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 6,491 காலிப் பணியிடங்களுக்காக இந்தத் தேர்வின் மூலம் கிராம நிர்வாக அதிகாரி (VAO), இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவையாளர், வரைபடம் வரைபவர், தட்டச்சர், ஸ்டெனோ தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
‘குரூப் 4’ தேர்வுக்காக 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டன.
இந்நிலையில், குரூப்-4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 6491ல் இருந்து 9398 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சுமார் 2907 பேர் இன்னும் அதிகமாக பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதில் tnpsc.gov.in இணைய தளத்தில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சரிபார்ப்பு முடிந்த பின்னர் தகுதிவாய்ந்த நபர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள்.
கவுன்சிலிங் மூலம் அவரவருக்கான துறைகள் பிரிக்கப்பட்டு பணியிடங்கள் வழங்கப்படும். இது தேர்வர்களின் தரம், பணியிடத்திற்கான தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படும்.
Also Read
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!
-
நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
-
உடன்பிறப்பே வா : 2000+ கழக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர்... கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!
-
திமுக 75 அறிவுத்திருவிழா : ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
"திமுகவை போல் இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!