Tamilnadu
“இட ஒதுக்கீடு ஏன் இப்போதும் தேவை?” - கேள்வி எழுப்பிய இளைஞருக்கு விளக்கிய ஆ.ராசா!
தி.மு.கவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின், பொறுப்பேற்றபின், இளைஞரணியினருக்கான முதல் பயிற்சிப் பாசறை விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது. அந்தப் பயிலரங்கில் பங்கேற்ற தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா எம்.பி., கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இட ஒதுக்கீடு இப்போதும் தேவையா என ஒரு இளைஞர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆ.ராசா, “மன ரீதியாக சாதிய வெறுப்பும், சாதி தீண்டாமையும் அகன்றுவிட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால், யதார்த்த வாழ்க்கையில், இடஒதுக்கீட்டைத் தவிர பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதற்கான வேறு எந்தத் திட்டமும் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும், கல்வி - வேலைவாய்ப்பில் தகுதி பெறும் அனைத்து வகுப்பினரின் பட்டியலை ஆய்வு செய்தால் இப்படியொரு கேள்வியே தோன்றாது.” என்றார்.
“கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் எல்லா மக்களுக்கும் எல்லாமும் கிடைக்கப் பெறுகிறபோது இந்தியா எனும் கலப்பு பொருளாதார நாட்டில் மக்களுக்கு அனைத்தையும் வழங்கமுடியாது” எனக் கேட்ட அந்த இளைஞரின் கேள்விக்கு பதிலளித்தார் ஆ.ராசா.
“சீனாவில் சாதிய கட்டமைப்போ, மனுநீதியோ, ரிக்வேதமோ இல்லை. அங்கு யாரும், யாரையும் நீ படிக்கக்கூடாது எனச் சொல்லவில்லை. ஆனால், இரண்டாயிடம் ஆண்டு இந்திய வரலாற்றில் இந்தக் கொடுமைகள் நடந்திருக்கின்றன. அதனால் தான் அம்பேத்கர், உலகத்தில் உள்ள எந்த அரசியல் சட்டத்தை எழுதியவனுக்கும் இந்தச் சிக்கல் இல்லை. எனக்கு பெரும் சிக்கல் இருக்கிறது என்றார்.
தென்மாவட்டங்களில் மாலை 6 மணி ஆனால் காவல் நிலையத்துக்குச் சென்று கைரேகை வைக்கவேண்டும் என சட்டம் இருந்ததா இல்லையா? அந்தக் கைரேகைச் சட்டம் ஒழிக்கப்பட்டது அவர்களுக்கும் கல்வி புகட்டிய பிறகுதான். கைநாட்டு முறை ஒழிக்கப்பட்டது இந்த இட ஒதுக்கீட்டு முறையினால் தான்.
வேறெங்கும் இல்லாத இந்தியாவின் தனித்த அடையாளம் - சாதி. அந்த சாதிய கட்டமைப்பால் கல்வி மறுக்கப்பட்டது. சாதியால் வேலைவாய்ப்பு பறிபோனது. பாலம் பழுதானால் தற்காலிக மாற்றுப்பாலம் அமைப்பது போல, சாதிய ஒடுக்குமுறையால் தீங்கிழைக்கப்பட்டவர்களுக்கான மாற்றுப் பாலம் தான் இட ஒதுக்கீடு.” எனப் பேசினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!