Tamilnadu

‘சினிமா கூத்தாடிகள் ஒன்றுமே செய்யமுடியாது’ - நடிகர் ரஜினிகாந்த் மீது சுப்ரமணியசாமி கடும் தாக்கு! 

பா.ஜ.க., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி இன்று காலை டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார். விமானநிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்த அரசியல் வருகை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சினிமா கூத்தாடிகள் தமிழ்நாட்டிற்காக ஒன்றும் செய்ய முடியாது. அவர் ( ரஜினிகாந்த்) சினிமா வெளியாகப் போகிறது பப்ளிசிட்டிக்காக அவர் இதுபோன்று கூறியிருக்கலாம். எத்தனையோ முறை அவர் சொல்லிவிட்டார். வரப்போறேன்.. வரப்போறேன்னு சொல்வார். கடைசியில் ஒன்றுமே நடக்காது.

ரஜினி, கமல் இருவரும் மக்கள் நலனுக்காக இணைவோம் என்று கூறுகிறார்களே..

அதெல்லாம் சரி. இந்த சினிமா டைலாக் எல்லாம் கேட்டு எனக்கு அலுத்துப்போய் விட்டது.

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று தகவல் வெளியாகி இருக்கிறதே...

அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஜெயிலில் அனுப்பியதற்கு என் வழக்கு காரணமாக இருந்தது. இன்னும் ஒன்றரை ஆண்டில் அவர் வெளியாவார் எனத் தெரிகிறது. அந்த கட்சியை நடத்துவதற்கு திறமை சசிகலாவிடம் இருக்கிறது. அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால் அ.தி.மு.க.,வினர் சசிகலாவிடம் சென்று விடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

Also Read: ரஜினி, கமலை நாகரீகமற்ற முறையில் விமர்சித்த அமைச்சர் - ரசிகர்கள் கொந்தளிப்பு!

இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார். சுப்ரமணிய சாமி இதற்கு முன்பு பலமுறை நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது நடிகர் கமலையும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.