Tamilnadu
“கலைஞரின் நன்மதிப்பு பெற்ற பத்திரிகையாளர் டாயல்” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
தமிழ் பத்திரிகை உலகில் மிகநெடிய அனுபவம்மிக்க மூத்த ஊடகவியலாளர் டாயல் மறைந்தது பலரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், “தமிழகத்தின் மிக மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான டாயல் மறைவு தமிழ்ப் பத்திரிகை உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்!
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் கோலோச்சியவர்.
தினத்தூது, தினசரி, மாலை முரசு, மணிச்சுடர் என பல்வேறு நாளிதழ்களில் பணியாற்றியவர். அதன் பிறகு தொலைக்காட்சி ஊடகத்திற்கு வந்தார். 2007ல் ’கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக இணைந்து 2017 வரை சிறப்பாகப் பணியாற்றினார். அந்தக் காலக்கட்டத்தில் அவரை முழுமையாக அறிந்தேன். மிகச்சிறந்த ஊடகவியலாளராக அவர் செயல்பட்டார்.
தலைவர் கலைஞர் அவர்கள் ‘நெஞ்சுக்கு நீதி’யில் தனக்குப் பிடித்த பத்திரிகையாளர்களுள் ஒருவர் என, டாயல் அவர்களது பெயரைக் குறிப்பிட்டுள்ளார். தமிழக பத்திரிகையுலகம் ஒரு நல்ல பத்திரிகையாளரை இழந்துள்ளது
பத்திரிகைத் துறைக்கு முன்னதாக திரைத்துறையிலும் இருந்துள்ளார். இப்படி பன்முக ஆற்றல் பெற்றவராக இருந்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ஊடகத் துறையைச் சார்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“தமிழ் மீனவர்களை கைவிடும் ஒன்றிய அரசு!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின் பூங்கா’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“தமிழ்நாடுதான் Electronics துறையின் Capital” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதுரை மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்? : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி!