Tamilnadu

“அமைச்சர் தலையீட்டால் அவசரமாக இறுதிச்சடங்கு நடந்தது ஏன்? ” : கரூர் அரசு பள்ளி மாணவி மரணத்தில் மர்மம்!

கரூர் மாவட்டம் வடக்கு பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவர் மகள் கோமதி. இவர் கரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி மாணவி கோமதி பள்ளிக்கு வழக்கம் போல சென்றுள்ளார். அப்போது பள்ளி கழிவறை அருகே திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, பள்ளி அசிரியர்கள் அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மாணவி கோமதியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், கோமதியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர் அன்பழகன் மற்றும் எஸ்.பி., பாண்டியராஜன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று, கோமதியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்து வைத்து அன்றே இறுதி சடங்கு செய்து உடனை எரித்துள்ளனர்.

மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பல அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் மாணவி உயிரிழந்த நாளன்று போக்குவரத்து துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் செல்லவேண்டிய தேவை ஏன்?

வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலிஸார் பள்ளி நிர்வாகத்தை விசாரணைக்கு உட்படுத்தியதா?, மேலும் அவர்கள் முறைப்படி இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் இருக்கும் போது, அதிகாரிகளே எப்படி எரிப்பதற்கு அனுமதி கொடுத்தார்கள் என பல கேள்விகளை உறவினர்கள் எழுப்பி வருகின்றனர்.

Also Read: “தற்கொலையா, கொலையா?” : செங்கல்பட்டு மாணவி உயிரிழப்பு குறித்து போலிஸார் தீவிர விசாரணை!

அதுமட்டுமின்றி, “கரூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜியின் உறவினர்கள் சிலர் தலைமைச் செயலகத்தில் மிக உயர்பதவியில் இருப்பதாகவும்,அவர்கள் மூலமாக வந்த அழுத்தம் காரணமாக இதுபோல நடந்ததாகவும் உறவினர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மாணவி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.