Tamilnadu
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை - மாலை சென்னையில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நாள் முதல் அவ்வப்போது கனமழை, மிதமான மழை என மாறி மாறி பெய்து வருகிறது. இருப்பினும், சென்னையின் சில நகரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து, வெயில் காய்ந்து வருவதால் மக்களும் சற்று அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையின் பல இடங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம், மயிலாப்பூர், சாந்தோம் உள்ளிட்ட பல பகுதியில் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதில், தென்மேற்கு வங்கக்கடலின் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலப்பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலை 26-32 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகை தரங்கம்பாடியில் 3 செ.மீ, நெல்லை அம்பாசமுத்திரம், பாபநாசம், தென்காசி, கொள்ளிடம் ஆகிய இடங்களில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!