Tamilnadu
நடிகர் செந்திலின் வீட்டை வாடகைக்கு வாங்கி மோசடி... சினிமா புரொடக்ஷன் மேனேஜர் கைது!
சென்னை சாலிகிராமத்தில் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. அந்தக் கட்டடத்தில் மொத்தமுள்ள 10 அறைகளையும் கடந்த 2013ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் (52) என்பவர் மாதம் ரூபாய் இரண்டரை லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து சர்வீஸ் அப்பார்ட்மென்ட் நடத்தி வந்தார்.
சகாயராஜ் சினிமா துறையில் புரொடக்சன் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சகாயராஜ் கடந்த 6 மாதங்களாக செந்திலுக்கு வாடகை தராமல் தொடர்ந்து காலம்தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த செந்தில் வீட்டை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
அப்போது, செந்திலின் கட்டடத்தை தனது சொந்தக் கட்டடம் எனக் கூறி, அதில் 7 அறைகளை சகாயராஜ் ‘லீஸ்’ மற்றும் வாடகைக்கு விட்டு ஓப்பந்தம் போட்டு பலரிடம் பணம் பெற்றுள்ளது தெரியவந்தது .
இதையடுத்து, செந்தில் விருகம்பாக்கம் போலிஸில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலிஸார் சகாயராஜை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!