Tamilnadu

சுஜித் உடல் முழுமையாகப் மீட்கப்பட்டதா? : டி.வி செய்தியால் வலுக்கும் சந்தேகம் - பதில் சொல்லுமா அரசு ?

கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி கடந்த 80 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஆனால், மீட்புப் பணிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், சிறுவன் சுஜித் உயிரிழந்தான்.

அக்டோபர் 28ம் தேதி இரவு 10.30 மணிவரை சுமார் 65 அடி ஆழம் தோண்டப்பட்ட பள்ளம் அதன் பிறகு நிறுத்தப்பட்டது. பாறையின் தன்மை குறித்து அறிவதற்காக தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பள்ளத்திற்கு அடியில் இருந்து துர்நாற்றம் வந்ததுள்ளது.

இதனையடுத்து, ரிக் இயந்திரத்தைக் கொண்டு மேலும் துளையிடும் பணி நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 65 அடி ஆழத்துக்கு பக்கவாட்டில் இடுக்கி போன்ற கருவிகளைக் கொண்டு துளையிட்டு சிறுவன் சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் நள்ளிரவு மீட்கப்பட்டது. இதனையடுத்து, குழந்தை உயிரிழந்துவிட்டதாக வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதன் பிறகு, பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சுஜித்தின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சிறுவனின் உடலை சவப்பெட்டியில் வைத்து பெற்றோர் ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரியிடம் ஒப்படைத்தனர்.

சுர்ஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக குழந்தை வைக்கப்பட்டு மணப்பாறை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தின் குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் கல்லறையில் அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட செய்தியில், ஆழ்துளைக் கிணற்றில் ஏர் லாக் முறையில் கை லாக் செய்யப்பட்டு இருந்தது, ஆனால் மீட்பு முயற்சியின்போது உடலின் ஒரு பாகம் மட்டுமே மீட்கப்பட்டதாகவும், மீதி உடல் பாகத்தை மீட்க முடியவில்லை என்றும் தகவல் வெளியானது.

அதேநேரம், மீட்கப்பட்டதாகச் சொன்ன குழந்தையின் உடலை ஊடகங்களுக்கோ, மற்றவர்களுக்கோ காட்டாமல் மறைக்கப்பட்டது. உடல் மீட்டு எடுக்கப்பட்டு, வேகவேகமாக பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பலர் தங்களது கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்குமா என்றும் பலர் தங்களது கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.