Tamilnadu
அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் கடனில் மூழ்கிய தமிழக மின் வாரியம்!
அணல், புனல் மின் நிலையங்கள் மற்றும் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்து வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு வழங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது தமிழக மின் வாரியம்.
அதன் மூலம் புதிய மின் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது, பழைய மின் கட்டமைப்புகளை சீரமைப்பது, பராமரிப்பு செலவு, நிலக்கரி கொள்முதல், ஊழியர்களுக்கான சம்பளம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது. தமிழ்நாடு மின் வாரியம், தானே உற்பத்தி செய்வதைத் தவிர தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது.
மின்சார கொள்முதல், நிர்வாக செலவுகளுக்கும், விநியோகம் மூலம் வரும் வருவாய்க்கு இடையிலான இடைவெளி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது.
இதனால் தமிழக மின்வாரியத்துக்கு கடன் சுமை ஏற்படுகிறது. கடந்த 2016-17ம் ஆண்டு மின்வாரியத்தின் கடன் 12 ஆயிரத்து 750 கோடியில் இருந்து 4 ஆயிரத்து 350 கோடியாக குறைக்கப்பட்டது.
அதன் பிறகு மத்திய அரசின் உதய் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டவுடன் 2017-18ம் ஆண்டில் மின் வாரியத்தின் கடன் 7 ஆயிரத்து 760 கோடியாக அதிகரித்தது. 2018-19ம் ஆண்டில் இந்த கடன் சுமை 9 ஆயிரத்து 256 கோடியாக உயர்ந்துள்ளது.
தொழிற்சாலைகள் புதுப்பிக்கத்தக்க மின் பயன்பாட்டை நோக்கிச் செல்லும் நிலையில், வரும் காலங்களில் மின் வாரியத்தின் இழப்பு மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள மின்வாரியம் உற்பத்தி, விநியோகம், கொள்முதல் என 3 நிறுவனங்களாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் கொள்முதல் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
மின் ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.5.50 காசுகள்தான் வாங்க வேண்டும். ஆனால் தமிழக மின்வாரியமோ தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.15.14 காசுகளுக்கு வாங்குகிறது. இதன் மூலமும் தமிழக மின்வாரியத்துக்கு கடன் சுமை அதிகரிக்கிறது.
மின் கொள்முதல், உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. கொள்முதல் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவதுடன், மின் வாரியத்தை சீரமைக்க உற்பத்தி, கொள்முதல் என பிரித்து செயல்படுவதே கடனில் இருந்து மீண்டு புத்துயிர் பெருவதற்கான ஒரே வழி என மின்வாரியத்தினர் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!