Tamilnadu
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரு நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் காலை மழை பெய்து வருகிறது. அதேப்போல் புதுச்சேரியில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கனமழை காரணாக கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக செல்லும் பெரியகுளம் சாலையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் கொடைக்கானல் - பெரியகுளம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளதால், அடுத்த இரு நாட்களுக்கு மேற்கூறிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Also Read
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
-
“பாசிஸ்ட்டுகளின் வஞ்சக சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு : பா.ஜ.கவின் ஆணவத்துக்கு அடி கொடுத்த நீதிமன்றம் - முரசொலி!