Tamilnadu
“பேனர் விவகாரத்தில் காத்து மேல தான் கேஸ் போடணும்” - அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் எகிடுதகிடு பேச்சு!
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஐ.டி.ஊழியர் சுபஸ்ரீ, சட்டவிரோதமாக அ.தி.மு.க-வினர் சாலையில் வைத்த பேனர் விழுந்த விபத்தில் பலியான விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து சுபஸ்ரீ உயிரிழப்புக்குக் காரணமான பேனரை அச்சடித்த அச்சக நிறுவனத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முக்கிய குற்றவாளி முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரனை போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால், ஜெயகோபால் தலைமறைவானதால் போலிஸார் தொடர்ந்து தேடி வருவதாகக் கூறப்பட்டது. எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் அரசு மற்றும் போலிஸாரின் மெத்தனப் போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் ஜெயகோபால்.
சட்டவிரோத பேனரால், இளம்பெண் பாலியான நிகழ்வையடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினரும், இனி பேனர் வைக்கமாட்டோம் என உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். ஆனால், ஆளும் அ.தி.மு.க-வோ இதுகுறித்து வருத்தமும் தெரிவிக்கவில்லை. பேனர் வைக்கக்கூடாது என தொண்டர்களுக்கு உத்தரவிடவும் இல்லை.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேனர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் பொன்னையன், “காற்றடித்துத்தான் பேனர் விழுந்தது. பேனர் வைத்தவர் வேண்டுமென்றே போய் பேனரை தள்ளிவிட்டு கொல்லவில்லை. வழக்குப் பதிவு செய்வதென்றால் காற்றின் மீது தான் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் இந்த அலட்சியப் பேச்சு சமூக வலைதளவாசிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய குற்றவாளி தனது கட்சிக்காரர் என்பதற்காக எந்தளவுக்கும் இறங்கிப் பேசும் நிலைக்கு வந்திருக்கும் பொன்னையனை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!