Tamilnadu
நெல்லை முதிய தம்பதி வீட்டில் திருட முயன்ற இரு கொள்ளையர்கள் கைது!
திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சண்முகவேல் கல்யாணி தம்பதி. ஆகஸ்ட் 11ம் தேதி அன்று அங்கு வந்த முகமூடி அணிந்துவந்த கொள்ளையர்கள் இருவர் அரிவாளால் தாக்கி கொள்ளையடிக்க முயன்றனர்.
அவர்களை, வயதான தம்பதியினர் கையில் கிடைத்த பொருட்களை ஆயுதமாக பயன்படுத்தி தாக்கியதில் இருவரும் தப்பி ஓடினர். இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி முதிய தம்பதியை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். மேலும், சுதந்திர தின விழாவில் தம்பதிக்கு முதலமைச்சர் வீர தீர செயலுக்கான விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த வழக்கில், குற்றவாளிகளை பிடிக்க டி.எஸ்.பி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கொள்ளைச் சம்பவம் நடைபெற்று 50 நாட்களுக்கு பிறகு கொள்ளையர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவன் பாலமுருகன் என்றும் அவன் மீது கடையம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
5 ஆண்டுகளுக்கு முன்பு அம்பாசமுத்திரம் பகுதிக்குச் சென்ற ரவுடி பாலமுருகன் மீண்டும் கல்யாணிபுரத்திற்கு வந்து கொள்ளையில் ஈடுபட முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, கைதான கொள்ளையர்கள் இருவரும் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!