Tamilnadu
தனியார் ஊழியரிடம் ரூ.20 லட்சம் கொள்ளை முயற்சி : சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் பணப்பரிவர்த்தனை அதிகாரியாக இருப்பவர் கிரிஷ். இவர் நேற்று பெங்களூரில் இருந்து சென்னைக்கு பேருந்து மூலம் ரூபாய் 20 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார்.
பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து உடன் பணிபுரியும் காவலாளி சந்திரகுமாருடன் இரண்டு சக்கர வாகனம் மூலம் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை பாரதி நகர் 2-வது தெருவில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் இரும்பு ராடுடன் வந்து கிரிஷ் கையிலிருந்த ரூ. 20 லட்சம் பணப்பையை பறிக்க முயன்றுள்ளனர்.
சுதாரித்துக் கொண்ட கிரிஷ் அங்கிருந்து தப்பி அருகில் இருந்த கடை ஒன்றிற்குள் ஓடியுள்ளார். ஆனாலும் முகமூடி கொள்ளையர்கள் துரத்தி வந்துள்ளனர். அப்போது கடையில் வேலை பார்க்கும் பாதுகாவலர் சையத் சுல்தான் என்பவர் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி திருடன் திருடன் என கூச்சலிட்டதும் கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாண்டிபஜார் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்கள் கையில் இரும்பு ராடுடன், கைத்துப்பாக்கியும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. கைத்துப்பாக்கி வைத்திருந்தும் தப்பி ஓடியதால் அது போலி துப்பாக்கியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், முகமூடி கொள்ளையர்கள் யார் என்றும் தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளும் கிடைத்துள்ளதால் அவற்றைக் கைப்பற்றி போலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
Also Read
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!