Tamilnadu
“இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெறும்” - மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு வேல்முருகன் பேட்டி!
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தி.மு.க வேட்பாளராக நா. புகழேந்தி விக்கிரவாண்டியிலும், காங்கிரஸ் சார்பில் நாங்குநேரியில் ரூபி மனோகரனும் போட்டியிட உள்ளனர்.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நடைபெற்ற நிலையில் அடுத்த வாரம் முதற்கொண்டு இவ்விரு தொகுதியிலும் தேர்தல் பிரசார வேலைகள் சூடுபிடிக்கத் தொடங்கும் நிலையில், இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார் வேல்முருகன். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் பணியாற்றுவது குறித்து மு.க.ஸ்டாலினுடன் ஆலோசிக்கப்பட்டது என்றும், விக்கிரவாண்டியில் தி.மு.க மகத்தான வெற்றியைப் பெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்ச் சமூகம் பல்வேறு இன்னல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது என்றார். கீழடி நாகரிகம் பாரத பண்பாடு என அமைச்சர் பாண்டியராஜன் கூறியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இந்தியை, சமஸ்கிருதத்தை திணிப்பவர்களுக்கு கூட தமிழர்களின் பெருமை பற்றிப் பேச வேண்டிய நிலையை கீழடி ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து , தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் வெளி மாநிலத்தவர்கள் தொடர்ந்து பணியமர்த்தப்பட்டு வருவதாக கூறிய வேல்முருகன், பிரதமர் மோடி தமிழில் பேசியதை வரவேற்றுள்ளார்.
Also Read
-
திமுக தலைவராக பொறுப்பேற்று 8-ஆம் ஆண்டு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணம் இதோ!
-
திமுக ஆட்சியை பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய அரசே தந்துள்ள நெத்தியடி பதில் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
”ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
-
”திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக நடத்தப்படும் குடமுழுக்கு விழாக்கள்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
-
”நம் கரங்களை வலுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தேஜஸ்வி யாதவ் பேச்சு!