Tamilnadu
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க... எளிதாக ‘நிலவேம்பு குடிநீர்’ தயாரிப்பது எப்படி? #HealthTips #Dengue
டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்களை நம்மால் அழிக்க முடியாமல் போனாலும், டெங்கு நம் உடலைத் தாக்காதபடி தடுப்பு முறைகளை மேற்கொண்டாலே போதும். டெங்கு வராமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
உங்களது ஊரில் உள்ள சித்த மருந்தகத்தில், நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் பொடி கிடைக்கும். அதை வாங்கிக் குடிக்கலாம். அல்லது நீங்களே தயாரிக்கவும் செய்யலாம். டெங்கு காய்ச்சல் மற்றும் மற்ற காய்ச்சல் வராமல் இருக்கவும் இந்தக் குடிநீரை அருந்தலாம்.
தேவை : நிலவேம்பு குடிநீர் தயாரிப்பது எப்படி எனப் பார்க்கலாம். நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சம் வேர், சந்தனக் கட்டை, பேய் புடல், கோரை கிழங்கு, சுக்கு, மிளகு, பப்படம் புல் ஆகியவற்றை சம அளவு எடுத்து, பொடித்துக் கொள்ளவும். நிலவேம்பு குடிநீர் பொடி தயார்.
செய்முறை : 2 டேபிள் ஸ்பூன் பொடியை, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவேண்டும். இது கால் லிட்டராக சுண்டிய பிறகு அருந்தலாம். கசப்பு சுவையாக இருப்பதால், அப்படியே குடிப்பவர்கள் குடிக்கலாம். தேவைப்படுபவர்கள் சிறிது பனங்கற்கண்டை சேர்த்துக் குடிக்கலாம்.
விதிமுறைகள் : தினந்தோறும் ஒரு முறை 7 நாட்களுக்குப் பருகவேண்டும். அன்றைய நாள் முழுவதும் சைவ உணவுகளைச் சாப்பிடவும். நிலவேம்பு குடிநீர் குடித்த பின், ½ - 1 மணி நேரம் கழித்து எளிதாக செரிக்கக்கூடிய சைவ உணவுகளைச் சாப்பிடலாம் நிலவேம்பு குடிக்கும் நாளில் அசைவ உணவுகள், பாகற்காய், அகத்திக்கீரை தவிர்க்கவும்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!