Tamilnadu
5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வானிலை நிலவரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.
இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
காற்று வேகமாக வீசக்கூடும் என்பதால் குமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதி மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதி மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குச் செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை இந்த ஆண்டு இயல்பை விட 15% அதிகமாகப் பெய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!