Tamilnadu
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா குடும்பத்துடன் பதுங்கல்? - மும்பைக்கு விரைந்தது தனிப்படை!
சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா, நீட் தேர்வின் மூலம் தேனி மருத்துக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தார். அண்மையில் அக்கல்லூரி முதல்வருக்கு அசோக் கிருஷ்ணன் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.
அதில், உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தற்போது மருத்துவம் படித்து வருவதாக புகைப்பட ஆதாரத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக, உதித் சூர்யா தலைமறைவானார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக உள்ள உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் குடும்பத்துடன் தலைமறைவாகினர். இந்த ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து முறையாக விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனையடுத்து, உதித் சூர்யாவின் நண்பர்கள்,வெங்கடேசனின் உறவினர்கள் என அனைவரிடத்திலும் தனிப்படை போலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா மும்பையில் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலிஸார் மும்பை விரைகின்றனர்.
மேலும், அதிகாரிகளுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற டிஜிபியிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுங்கள்! - முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!” : மு.க.ஸ்டாலின்!
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!