Tamilnadu
நாங்குநேரி – விக்ரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, “தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.” என அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, செப்டம்பர் 23-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கும். வேட்பு மனுதாக்கல் செய்யவேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 30-ம் தேதி. அதன்பின்பு வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.
மனுக்களை திரும்பப் பெற அக்டோபர் 3-ம் தேதி கடைசி நாள் எனவும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அக்டோபர் 24-ம் தேதி வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறை முறைகளும் உடனடியாக அமல்படுத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளையும் சுனில் அரோரா அறிவித்தார்.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!