Tamilnadu
14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை மையம் தகவல்!
வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், “தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டிய வங்கக் கடற்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டதால் தமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது” எனத் தெரிவித்தார்.
அடுத்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என்றும் கூறிய அவர், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலூர், திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, திருச்சி, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறினார். அதேபோல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
இந்த மழைப்பொழிவு அடுத்த 3 நாட்களுக்கு தமிழகப் பகுதிகளில் தொடரும் எனவும் தெரிவித்துள்ள அவர், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 32 செ.மீ மழை பெய்துள்ளதாகவும் இது இயல்பு அளவு 24 செ.மீ-யை விட கூடுதலாகப் பதிவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், சென்னையில் 29 செ.மீ இயல்பு அளவை விட 50 செ.மீ மழை இதுவரை பெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக திருவள்ளூரில் 22 செ.மீ, பூண்டியில் 21 செ.மீ, அரக்கோணத்தில் 17 செ.மீ மற்றும் நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!