Tamilnadu
"எந்த மாதிரி பூட்டாக இருந்தாலும் திறப்போம்" - தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் அதிர்ச்சி வாக்கு மூலம் !
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வந்தது.
இதனையடுத்து, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை தேடும் பணியில் வேலூர் மாவட்ட காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதற்காக வாணியம்பாடிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணிகளிலும், வாகனத் தணிக்கைகளிலும் போலிஸார் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக இரண்டு பைக்குகளில் வந்த நால்வரை மடக்கிய போலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நால்வரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலிஸார் அவர்களது பாணியில் விசாரித்துள்ளனர்.
மேலும், பூட்டிக்கிடக்கும் வீடுகளை பகல் நேரங்களில் நோட்டமிட்டு, நள்ளிரவு சமயத்தில் வீடு புகுந்து நகைகள், பணம் மற்றும் எல்இடி டிவி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கொள்ளையடித்த நகைகளை அடகு கடைகளில் அடகு வைத்தும், டிவி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை குறைந்த விலைக்கு விற்று அதில் வரும் பணத்தை வைத்து குடித்துவிட்டு உல்லாசமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.
நசீர் பாஷாவும், அவரது மகன் நவீத்தும் எந்த மாதிரியாக பூட்டாக இருந்தாலும் அதனை உடைப்பதில் கில்லாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணை நடத்திய பின்னர், அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், 10 சவரன் நகைகள், 2 தொலைக்காட்சிகளை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!