Tamilnadu
“பெரியாரின் பிறந்தநாளில் இந்துத்துவத்திற்கு எதிராக சபதம் ஏற்கவேண்டும்” : ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்!
தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், “தந்தை பெரியாரின் பிறந்தநாளன்று அவருக்கு நாம் செலுத்தக்கூடிய மரியாதை என்பது தேசத்தில் மதச்சார்பின்மைக்காக, சாதி பேதமற்ற சமூகத்தை அமைப்பதற்காக ஏன் சமூக மாற்றத்திற்காகப் போராடுவதுதான் என நாங்கள் கருதுகிறோம்.
குறிப்பாக மத்தியில் இரண்டாவது முறையாக அதிகாரத்துக்கு வந்துள்ள பா.ஜ.க ஒரே மொழி என்று இந்தியை திணிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளையும், ஒரே கலாச்சாரம் என்ற இந்துத்துவா ஏற்படுத்தக்கூடிய முயற்சியையும் எதிர்த்துப் போராடுவதும், அதற்காக சபதமேற்பதும்தான் அய்யா பெரியார் அவர்களுக்கு செலுத்தக்கூடிய மிகப்பெரிய அஞ்சலி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கூற விரும்புகிறேன்.
ஏற்கனவே கல்வி உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது எட்டாம் வகுப்பு தேர்வில் பொதுத்தேர்வு கூடாது என்று அந்த சட்டத்தின் முக்கியமான பிரிவு இருக்கிறது. இந்நிலையில் இதனை சீர்குலைக்க மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு அரசு கல்வி உரிமைச் சட்டத்தை திருத்தி 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்று கொண்டு வந்தபோதே கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. எனவே இந்த முடிவை அ.தி.மு.க அரசு கைவிடவேண்டும்.” எனத் தெரிவித்தார்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!