Tamilnadu
பிறந்த குழந்தையின் உடலில் 20 நாட்களாக கிடந்த ஊசி... தொடரும் அரசு மருத்துவமனையின் அலட்சியம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பச்சிளம் குழந்தையில் உடலில் மருந்து ஊசி சிக்கி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 20ம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மலர்விழி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது குழந்தைக்கு இடது கையிலும், கால் தொடையிலும் 2 தடுப்பூசிகள் போடப்பட்டது.
ஊசிப் போட்டப்பிறகு, குழந்தை தொடர்ந்து அழுத நிலையிலேயே இருந்துள்ளது. இருப்பினும் 31ம் தேதி மலர்விழி தனது குழந்தையுடன் வீடு திரும்பினார். அதனையடுத்து, குழந்தையின் அழுகை நின்றப்பாடில்லை. குறிப்பாக, குழந்தை இடப்புறமாக திரும்பி படுக்கையில் கூச்சலிட்டு அழுதுள்ளது.
இதனையடுத்து, குழந்தையை பாட்டி குளிப்பாட்டும் போது, அவரது கைது ஏதோ குத்தியது போன்று தெரிந்துள்ளது. அதன் பிறகு ரத்தம் வந்ததும் அதிர்ச்சி அடைந்த பாட்டியும், உறவினரும், குழந்தையின் காலுக்குள் ஊசி இருந்துள்ளதை கண்டனர்.
மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றதும், அங்கு மருத்துவர் குழந்தையின் உடலில் இருந்த ஊசியை அகற்றி சிகிச்சை அளித்து வருகிறார். அப்போதுதான் குழந்தைக்கு தடுப்பூசி போடும் போது ஊசி சிக்கியுள்ளது தெரிய வந்ததுள்ளது.
அதன் பிறகு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சிய போக்கு குறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் குழந்தையின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.
இதேபோல், சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. நோய்த் தொற்றுள்ள இளைஞரின் ரத்தம் ஏற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும், அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்த சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!