Tamilnadu
விபத்தில் இறந்த கணவர் : மறுநாளில் மனைவிக்கு நேர்ந்த கொடுமை : அதிர்ச்சியில் உறவினர்கள்!
திருநெல்வேலி மாவட்டம் சாம்பவர் வடகரையை பகுதியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மனைவி களஞ்சியம் அம்மாள். 70 வயதான அய்யாக்கண்ணு அங்குள்ள காற்றாலையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி அய்யாக்கண்ணு வேலை முடிந்து வீடு திரும்புகின்ற போது தனது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கணவரின் மறைவால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி களஞ்சியம் அம்மாள் கதறி அழுதுள்ளார். சோகத்தில் இருந்து மீளாத அவருக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட சிறிது நேரத்திலே களஞ்சியம் அம்மாள் இறந்து போனார்.
கணவர் இறந்து போன மறுநாளே மனைவி மாரடைப்பால் இறந்து போன சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!