Tamilnadu

தனியார் மயமானது சென்னை மெட்ரோ ரயில்: கேள்விக்குறியாகும் ஊழியர்களின் நிலை; கட்டணம் உயர வாய்ப்பு?

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனியாருக்கு மாற்றப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் ஊழியர்கள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் பணிபுரிந்தாலும், அரசின் கட்டுப்பாட்டிலேயே மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்பட்டு வந்தது. தொழில்நுட்பம், ரயில் ஓட்டுநர்கள் போன்ற முக்கிய பணிகளில் நிரந்தர ஊழியர்கள் இருந்தனர்.

இந்த நிலையில், நிலையக் கட்டுப்பாட்டு பணியாளர்கள், பராமரிப்பு பணியாளர்கள், டிக்கெட் வழங்குபவர், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் இன்று (செப்.,1) முதல் தனியார் மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 250 நிரந்தர பணியாளர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சத்தில் செய்வதறியாது ஊழியர்கள் திணறி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் ஏற்கெனவே அதிகமாக இருந்த நிலையில், தற்போது இரவோடு இரவாக தனியார் மயமாக்கப்பட்டதால் மேலும் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.