Tamilnadu
மலிவு விலை வீட்டு மனைகள்; காசா கிராண்ட் நிறுவன விளம்பரத்தை நம்ப வேண்டாம்- காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை
சென்னையில் வீடு அல்லது மனை வாங்குவதை மக்கள் கனவாக கொண்டுள்ளனர். இதனால் சில வீட்டுமனை விற்பனை நிறுவனங்கள் மக்களின் ஆசையை தங்களுக்கான வியாபாரமாக மாற்றி, விவகாரமுள்ள நிலங்களை விற்றுத் தீர்த்து வருகின்றன. இதனால் பல்வேறு சட்ட சிக்கலுக்கு மக்களும் ஆளாகின்றனர்.
அதிலும், சந்தையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையை விட, மலிவான விலையில் வீட்டு மனைகளை மோசடி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த வகையில், சென்னையை அடுத்த தாழம்பூரில் தள்ளுபடி விலையில் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படுகிறது என பிரபல காசா கிராண்ட் தனியார் நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.
இதில் வில்லங்கம் என்னவென்றால், காசா கிராண்ட் விளம்பரப்படுத்தியுள்ள இந்த வீட்டுமனை பிரிவுகள் அனைத்தும் அரசின் விசாரணை வளையத்திற்குள் உள்ளது. இது தொடர்பாக ஏதும் தெரியாமல் அந்த நிலங்களை மக்கள் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், காசா கிராண்ட் நிறுவனம் விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தியுள்ள வீட்டு மனைப்பிரிவு குறித்து அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், தள்ளுபடியில் வீட்டு மனையை வாங்கவுள்ள மக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும், தள்ளுபடி விளம்பரங்களை நம்பி வீட்டு மனைகளை வாங்கினால் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சேமிப்போம் சிறப்பாக வாழ்வோம் ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக சிக்கன நாள் வாழ்த்து!
-
“குறுவைப்பருவத்தில் 1,45,634 விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
பள்ளிக்கரணை சதுப்புநிலம் - கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
“சென்னையில் இதுவரை 5.38 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!