Tamilnadu
மாசடைந்த நகரமாக உருமாறிய திருப்பூர்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சித் தகவல்!
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப் படி, காற்று, நீர், நிலம் மாசுபாடு குறித்து நாடுமுழுவதும் உள்ள 100 நகரங்களில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தியது.
இதில், தமிழகத்தில் உள்ள திருப்பூர் 70 புள்ளிகளை கொண்டு, மிகவும் மோசமான மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் ஆடை உற்பத்தித் துறையைச் சேர்ந்த சாய சலவை, பிரிண்டிங் நிறுவனங்கள் புதிதாக எந்த விரிவாக்கவும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் சாய ஆலைகள், பிரிண்டிங் போன்ற நிறுவனங்களின் லட்சக்கணக்கான இயந்திரங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், வாகன புகையால் பல்வேறு நோய் பாதிப்புகளுடன் வாழ்ந்து வருவதாக, மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!