Tamilnadu
சொத்துக்காக நடுரோட்டில் தம்பியை குத்திக்கொன்ற அண்ணன் : தருமபுரி அருகே பரபரப்பு
தருமபுரி மாவட்டம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் காவேரி-சத்தி தம்பதிக்கு 3 மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக 75 சென்ட் நிலம் உள்ளது. இதில், மூத்த மகனான வெங்கடாசலபதி, தமக்கு சொத்தில் அதிக பங்கு தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவரது தம்பிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, வெங்கடாஜலத்துக்கும், அவரது தம்பி நரசிம்மனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் பணியை முடித்துவிட்டு, நண்பர் மணியுடன் மோட்டார் சைக்கிளில் நரசிம்மன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, மற்றொரு வாகனத்தில் வந்த அவரது அண்ணன் வெங்கடாஜலம், தம்பி என்றும் பாராமல் நரசிம்மனை கத்தியால் மார்பில் கத்தியால் குத்தியுள்ளார். தம்பியைக் குத்திவிட்டு வெங்கடாசலபதி அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார்.
இதில், பலத்த காயமடைந்த நரசிம்மனை மீட்ட பொதுமக்களில் சிலர், அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நரசிம்மனின் உயிர் பிரிந்தது.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த படுகொலை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நரசிம்மனை அவரது அண்ணன் கொலை செய்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள வெங்கடாசலபதியை தேடி வருகின்றனர்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!