Tamilnadu
வைகை எக்ஸ்பிரஸுக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரசிகர்கள்!
மதுரை முதல் சென்னை வரை தினந்தோறும் 497 கி.மீ தொலைவுக்கு இயக்கப்பட்டு வருகிறது அதிவிரைவு ரயில் சேவையான வைகை எக்ஸ்பிரஸ். தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு விரையும் அனைத்து பயணிகளுக்குமே வைகை எக்ஸ்பிரஸ் ஒரு விமானம்தான்.
தென்னக ரயில்வேயில் முதலில் கண்ணாடி ஜன்னல், நவீன ஜன்னல் போன்ற அம்சங்கள் கொண்டவரப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில்தான். பகல் நேர அதிவிரைவு ரயில் சேவையாக உள்ள வைகை எக்ஸ்பிரஸ், 1977ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்டது.
நேற்றோடு வைகை எக்ஸ்பிரஸ் தனது ரயில் சேவையில் 42வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இதனையொட்டி, மதுரை சந்திப்பில், பொதுமக்களும், ரயில்வே அதிகாரிகளும் வைகை எக்ஸ்பிரஸுக்கு பூமாலை சூட்டி, கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர்.
வைகை எக்ஸ்பிரஸுக்கு வெட்டப்பட்ட கேக்கில், வெளியூருக்கு பணி நிமித்தமாக செல்லும் அனைவரையும் பாதுகாப்பு அழைத்துச் சென்றதற்கு ஆயிரக்கணக்கான கைகளின் சார்பில் லட்சக்கணக்கான நன்றிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!