Tamilnadu
தமிழை விட தொன்மையானதா சமஸ்கிருதம்? : கடும் எதிர்ப்பால் சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்!
பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தின் 142வது பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் பாடம் ஐந்தில், 'The Status of Tamil as a Classical Language' எனும் பாடத்தில், சமஸ்கிருதம் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மொழி என்றும், தமிழ் மொழி கி.மு. 300 ஆண்டுக்கு முற்பட்ட மொழி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழின் தொன்மையை திட்டமிட்டு தாழ்த்தியுள்ளதாகக் கூறி, தமிழ் மொழியார்வலர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
+2 பாடப் புத்தகத்தில் தவறான தகவல் இடம்பெற்றிருந்தது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால் சமஸ்கிருதமோ 4000 ஆண்டுகள் பழமையானதாம். காவியைப் பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து, 12ம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தை வடிவமைத்த 13 பேர் கொண்ட குழுவிடம் விளக்கம் கேட்டு, தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, சில ஆசிரியர்கள் துறை இயக்குனரிடம் விளக்கக் கடிதங்களை அளித்துள்ளனர். குழுவைச் சேர்ந்த 13 ஆசிரியர்களும் விளக்கக் கடிதங்களை அளித்தபிறகு, அவற்றை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய பகுதியை முழுமையாக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு அந்தப் பகுதியை கற்பிக்கக்கூடாது எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!