Tamilnadu
நீட் தேர்வு மோசடி : அரசுப் பள்ளியில் படித்த ஒரே ஒரு மாணவிக்கு மட்டுமே ‘சீட்’ - சிதையும் மருத்துவக் கனவு !
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதை மத்திய பா.ஜ.க. அரசு க்டந்த ஆண்டு கட்டாயமாக்கியது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள மருத்துவக் வேற்று மாநில மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்பு வெளியானது. இதனால், தமிழக மாணவர்களுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போனது. இது தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துள்ளது.
இந்த ஆண்டுக்கான மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி தொடங்கி நடைபெற்றது. அரசு மற்ற்ம் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் நிரம்பி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் படித்த கீர்த்தனா என்கிற மாணவி இந்தாண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவிக்கு மட்டும் அரசு ஒதுக்கீட்டு இடம் கிடைத்துள்ளது. அதுவும் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து நீட் தேர்வில் 453 மதிப்பெண் பெற்று இருந்தாலும் அவருக்கு தனியார் கல்லூரியிலேயே இடம் கிடைத்துள்ளது.
தற்போது அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிந்துவிட்டது. இதுவரையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் எத்தனை பேருக்கு இடம் கிடைத்துள்ளது என்பது குறித்த பட்டியலை அரசு வெளியிடாதது ஏன் என கல்வியாளர்களும், பெற்றோர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 2017-2018ம் ஆண்டு அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 8 பேருக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு வெறும் 1 இடம் மட்டுமே கிடைத்துள்ளது என்பது வேதனைக்குறிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 8 பேருக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைத்தன. அதுமட்டுமின்றி, அரசு சார்பில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டன. அதன்மூலம் தேர்ச்சி பெற்று தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த மாணவ-மாணவிகள் எத்தனை பேர் என்கிற பட்டியலும் வெளியிடப்படவில்லை.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!