Tamilnadu
அதிகரிக்கும் சாதி ஆணவப் படுகொலை: தலித் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்த இளைஞர் படுகொலை!
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாயில் உள்ள முகிழ்த்தகம் கிராமத்தைச் சேர்ந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் அஜீத்குமார். தண்ணீர் லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளார். இவர், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ரஞ்சனியை காதலித்துள்ளார்.
இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஞ்சனியின் தந்தை கண்டித்ததாகக் இருவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்தவாரம் சனிக்கிழமை வேலைக்குச் சென்ற அஜீத்குமார் இரவு வீடு திரும்பவில்லை. பின்னர் அவரது செல்வோனுக்கு அழைப்பு விடுத்தபோது போன் அணைக்கப்பட்டிருந்தது. இதனால் அஜீத் வீட்டார் அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தேடியுள்ளனர். அப்போது தொண்டிஅருகே உள்ள நம்புதாளை வனப்பகுதியில் சடலம் ஒன்று எறியப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது, சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அஜீத்குமார் இரு கைகளும் கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். பின்னர் அவரை உடலை பிரதிபரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணியினர் அஜீத்குமார் உடலைவாங்க மறுத்து மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள்யாரும் பேச்சுவார்த்தைக்கு முன்வராத நிலையில் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை என தகவல் கூறப்படுகிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!