Tamilnadu
கையெழுத்தாகும் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்: மக்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாத பா.ஜ.க - அ.தி.மு.க அரசு
காவிரி படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான புதிய ஒப்பந்தங்கள் வருகிற 16ம் தேதி டெல்லியில் கையெழுத்தாக உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் மூன்று புதிய ஒப்பந்தங்கள் அடுத்ஹ்ட வாரம் வழங்கப்பட உள்ளது. காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க இரண்டாம் கட்ட ஏலத்தில் இந்தியன் ஆயில் கார்பரரேஷன் தேர்வாகி உள்ளது. 474 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது.
அதேபோல், மூன்றாம் கட்ட ஏலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 1863 சதுர கிலோ மீட்டர் பகுதியில் இரண்டு இடங்களிலாக ஹைட்ரோ கார்பன் எடுக்க தேர்வாகியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் காவிரி டெல்டா பகுதியில் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளன.
தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசின் செயல் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் தமிழக அரசு சொல்லி வரும் நிலையில் மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக தமிழகத்தில், தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் என பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுமக்கள், விவசாயிகளுடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தின. ஆனால், ஆளும் அடிமை அதிமுக அரசோ ஒரு துரும்பையும் கிள்ளி போடாது மக்களை வஞ்சித்து வருகிறது.
இந்நிலையில், மக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கையெழுத்தாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது டெல்டா பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!