Tamilnadu
நீலகிரியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை செயல்படுத்த ஆ.ராசா மனு!
டெல்லியில் மத்திய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார் நீலகிரி மக்களவை தொகுதி எம்.பி. ஆ.ராசா.
அப்போது கோவையில் இருந்து நீலகிரிக்கு செல்லும் போக்குவரத்து திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அவற்றை செயல்படுத்தக் கோரி மனு அளித்தார்.
அந்த மனுவில் கோயமுத்தூர் முதல் சத்தியமங்கலம் (65 கிமீ) சாலை, கிழக்கு பைபாஸ் ரோடு (54 கிமீ), கோவை - கரூர் (114 கிமீ), L&T பைபாஸ் சாலை ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சாலை போக்குவரத்து பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024ம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலருக்கு உயர்த்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆகவே பொருளாதார மேம்பாட்டில் கோவை மாவட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் பங்கு இருக்கிறது.
வர்த்தக ரீதியில் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கோவை போன்ற பகுதிகளின் தரம் உயர்த்தப்படுவதின் மூலம் இலக்கை எட்ட வாய்ப்புள்ளது என்றும் ஆ.ராசா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் நிதின் கட்கரிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!