Tamilnadu
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி நியமித்து அரசாணை பிறப்பிப்பு!
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகமும், டி.ஜி.பியாக ஜே.கே.திரிபாதியையும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனையொட்டி நேற்று தலைமைச் செயலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
இதனையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகத்தை நியமித்து இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல், சட்டம் ஒழுங்கு காவல்துறையின் டி.ஜி.பியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் ஏற்கெனவே 2 ஆண்டுகள் நீட்டித்த நிலையில் அவருடைய பதவிக்காலமும் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
இதனையொட்டி, சீருடை பணியாளர் தேர்வாணையத் தலைவராக உள்ள ஜே.கே.திரிபாதியை சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க மீது பொய்யாக அவதூறு.. தவெகவின் இழிவான செயல்” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.
-
மக்களின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்குமா தவெக? : கனிமொழி கேள்வி!
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!