Tamilnadu
4 வயது பெண் குழந்தை கொலை : பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது அம்பலம்!
சென்னை திருமுல்லைவாயில் அந்தோணி நகரில் ஒரு தம்பதியர் 4 வயது மகள், 8 வயது மகனுடன் வீட்டில் வசித்து வருகின்றனர். கணவர் அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிவருகிறார். மனைவி 4 வயது சிறுமியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு மகனை டியூஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை என மனைவி கணவரிடம் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த கணவர், மனைவியுடன் சேர்ந்து சிறுமியை தேடியுள்ளார். அப்போது வீட்டின் கழிவறையின் ஒரு ஓரத்தில் வாளிக்குள் கிடந்த சாக்கு மூட்டையில் சிறுமி உயிரிழந்து கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் முதற்கட்ட தகவலின்படி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமியின் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர் மீனாட்சி சுந்தரம் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து நடத்தினர் . விசாரணையில் குழந்தையை அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் முன்னாள் ராணுவ வீரர். 60 வயதானவர் இந்தக் கொடூரத்தை செய்தது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாகியுள்ளது.
Also Read
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!